மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே மழை வெளுத்து வாக்கியுள்ள நிலையில், மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் மும்பையில் கனமழை பெய்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை சில பகுதிகளில் 50 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோத் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக பைதான் பகுதியில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை உட்பட 7 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வரை மகாராஷ்டிரா முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}