டோரன்டோ: முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலிபா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போய் தனது வேலையை இழந்துள்ளார்.
ஆபாசப் பட நடிகையாக வலம் வந்தவர மியா கலிபா. இவரது வீடியோக்கள் இணையதளத்தில் மிக மிக பிரபலம். இந்த நிலையில் இவர் இஸ்ரேல் - ஹமாஸ் போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ போட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. அதேசயம் இப்போது இது இவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதலே தொடர்ந்து வீடியோக்களையும், டிவீட்டையும் போட்டு வந்தார் மியா கலிபா. இதனால் கோபமடைந்த கனடா நாட்டு ரேடியோ நிறுவனம், மியா கலிபாவை தனது ஒப்பந்தத்திலிருந்து நீக்கி விட்டது.
ஆனால் இந்த வேலை நீக்கத்துக்காக மியா கலிபா கவலைப்படவில்லை. அவர் போட்டுள்ள பதில் டிவீட்டீல், பால்தீனியர்களை ஆதரித்ததற்காக எனது வேலை போனதற்காக நான் இப்போது கவலைப்படவில்லை. மாறாக இப்படிப்பட்ட பாசிஸ்ட்டுகளிடம் போய் நான் வேலை ஒப்பந்தம் போட்டு விட்டேனே என்று என் மீதுதான் இப்போது எனக்கு கடும் கோபம் வருகிறது என்று நக்கலாக கூறியுள்ளார்.
பாலஸ்தீனியர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்களது சுதந்திரப் போராட்டம் தொடர்கிறது என்றும் மியா கலிபா கூறியுள்ளார்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}