சென்னை: 2024-2025ம் ஆண்டுக்கான 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணையினை தற்போது வெளியிட்டுள்ளார்.தற்போது முதல் பருவ தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் விதத்தில் இந்த அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையினை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதில்,

12ம் வகுப்பு பொதுத் தேர்வு
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3 - மொழிப்பாடம்
மார்ச் 6 - ஆங்கிலம்
மார்ச் 11 - கணிதம், விலங்கியல், வணிகள், மைக்ரோ பயலாஜி
மார்ச் 14 - கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியல், புள்ளியியல்
மார்ச் 18 - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
மார்ச் 21 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 25 - இயற்பியல், பொருளாதாரம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு
11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும்.தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 - மொழிப்பாடம்
மார்ச் 10 - ஆங்கிலம்
மார்ச் 13 - கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
மார்ச் 17 - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 24- கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
மார்ச் 27 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு
10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். முன்னதாக, பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 -தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
ஏப்ரல் 2 - ஆங்கிலம்
ஏப்ரல் 7 - கணிதம்
ஏப்ரல் 11 - அறிவியல்
ஏப்ரல் 15 - சமூக அறிவியல்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
{{comments.comment}}