சென்னை: பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகார்கள் குறித்து கைது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல மணப்பாறையிலும் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் மீது பாலியல் புகார்கள் எழுந்து பள்ளியை சூறையாடிய சம்பவமும் நடைபெற்றது.

இப்படி ஆங்காங்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள் பாதுகாப்பாக கருதும் பள்ளிகளிலேயே பாலியல் தொந்தர்வுகள் அதிகரித்து வருவதால் பெற்றோர்களிடையே அதிருப்தி நிலவி வருகின்றன. அதே சமயத்தில் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த வாரம் பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களது கல்வி சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய விதிகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}