களத்திற்கு வரச் சொல்லுங்க.. அடிமட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்.. அமைச்சர் சேகர்பாபு சவால்..!

Feb 20, 2025,05:55 PM IST

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை களத்திற்கு வர சொல்லுங்கள். எங்களின் சாதாரண அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலைத்துறை  முற்றிலும் ரத்து செய்யப்படும். கோயில் வருமானத்தை சீரழிக்கிறார்கள் எனக் கூறியிருந்தார். 


இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிற்க சொல்லுங்கள். அடிமட்ட தொண்டனை வைத்து நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுகிறோம் என  அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டு பேசி உள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,




தமிழ்நாட்டில் நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை கூடுவதும், நாளுக்கு நாள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும், எங்கு பார்த்தாலும் கோயில்களில் குடமுழுக்குகளால் தேவாரம், திருவாசகம், மணி ஓசை, ஆராதனை, நடைபெறுவதும், அவர்களுக்கு எப்படி வயிறு எரிச்சலை கிளம்பாமல் இருக்கும். ஆகவே அண்ணாமலை போன்றோர்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியலை நடத்தலாம் என எண்ணியவர்கள் இன்றைக்கு ஆன்மிகத்தை வைத்து அரசியல் நடத்துவதற்கு இடமில்லை என்பதால் இது போன்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். 


எங்கள் இயக்கத்தை பொறுத்த அளவில் அடிக்கடிக்க உயர்கின்ற பந்து இது. தீட்டத்தீட்ட ஒளி தருகின்ற பட்டை வைரம் இது. அதனால் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும், எங்கள் இயக்கத்தினர் இன்னும் விறுவிறுப்புடன் வீர நடை போடுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். வர சொல்லுங்கள் பார்க்கலாம். தயாராக இருக்கிறோம்.


எங்கள் தலைவர் இன்றைக்கும் அறுதியிட்டு, உறுதியிட்டு நிமிர்ந்த நெஞ்சோடு ஏன் 

இருமாப்பு செருக்கென்று  கூட எடுத்துக் கொள்ளுங்கள். களத்திற்கு வர சொல்லுங்கள். சாதாரண அடிமட்ட தொண்டனை கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, என்று சொல்லும் அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்