தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்

Jun 03, 2025,11:31 PM IST

அரியலூர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயர்வு என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தி தவறானது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.


நீதிமன்றமோ இது குறித்து கருத்துக்களை மக்களிடம் கேட்டு ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நடத்தப்படுகிறது. 




அரசைப் பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயராது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல முறை பேருந்து கட்டணம் உயர்வு என்று தகவல் வந்த போது கூட, பேருந்து கட்டண உயர்வு இருக்காது. தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயராது என்று தமிழ் முதல்வர் தெரிவித்துள்ளார். 


தற்பொது உலக அளவில் டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், மத்திய அரசு டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வில்லை. அந்த பாதிப்பு, அந்த சுமை பொதுமக்கள் மீது ஏறக்கூடாது என்று தான் தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று தெளிவு படுத்தச் சொன்னார்கள். நானும் தெளிவு படுத்தியுள்ளேன். மீண்டும் அதையே தான் வலியுறுத்த விரும்புகிறேன்.  தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தால் தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கே அவர்களின் வழக்கின் அடிப்படையில், மக்களின்  கருத்தை கேட்கச் சொல்லி நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்