சென்னை: பட்ஜெட்டின் ஆரம்பத்தில் பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டினின் வரிகளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக... Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். அதன்பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் ஆளுநர் உரையை வாசித்தார். அதன்பின்னர் கடந்த 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் விவாதமும், மு.க.ஸ்டாலின் உரையும் இடம்பெற்றது.

அதன்பின்னர் சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது “Inequality is a choice, but we can Choose a different path..!” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அமைச்சர் தங்கம் தென்ரசு உரையை தொடங்கினார். சுமார் 2 மணி 33 நிமிடங்களில் பட்ஜெட் உரையை வாசித்தார்.
உரையை முடிக்கும் போது, என் நீண்ட உரையின் முத்தாய்ப்பாக என்று கூறி,
The wooda are lively, dark and deep, But i have promises to keep, And mile to go before i sleep, And miles to go before i sleep என்ற Robert Frost கவிதையை மேற்கோள் காட்டி முடித்துள்ளார்.
இந்த கவிதை உழைப்பு உழைப்பு என ஓயாது, இமைப்பொழுதும் கண் துஞ்சாது, தமிழ்நாட்டின் நலன்குறித்து எந்நாளும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்ருக்கு பொருந்தும் என தெரிவித்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!
Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
{{comments.comment}}