சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் பகலில் வெயில் அதிகரித்தாலும், மாலையில் பருவநிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று உள் மாவட்டம் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வட தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலும் மழையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழகத்தில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம். அப்போது அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புக் குறைவு. அதேபோல் மார்ச் 22 முதல் 25 தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய கூடும்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}