சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அதன்படி மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதேபோல் கன்னியாகுமரியில் 8 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரியில் 6 சென்டிமீட்டர் மழையும், கோவையில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
21 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:
இன்று (19.4.2025):
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை(20.4.25):
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வெயில்:
இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அப்போது அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்த வெப்பநிலை, ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}