உத்தரப் பிரதேசத்தில் விபரீதம்.. ஆன்மீக சொற்பொழிவின்போது பெரும் கூட்ட நெரிசல்.. 122 பேர் பரிதாப பலி!

Jul 02, 2024,06:31 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் ஆன்மீகத் தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக கூடிய கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டு 122 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தவர்களின் உடல்கள் குவிந்து வருவதால் மருத்துவமனையில் உடல்களை வைக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகிறார்கள்.


உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரும் பரபரப்பை இந்தசம்பவம் ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸைச் சேர்ந்தவர் போலே பாபா. இவர் ஒரு ஆன்மீகத் தலைவர். இவருக்கு மிகப் பெரிய ஆதரவாளர் கூட்டம் உள்ளது. இவர் இன்று ஹத்ராஸில் ஒரு சத் சங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதாவது பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த சத் சங்கத்திற்கு போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.




இந்த நிலையில் திடீரென கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலரும் முண்டியடித்து சாமியாரைக் காண முயன்றதால் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் கொண்டனர். நெரிசல் ஏற்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டு அங்கிருந்து பலரும் தப்பி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் விழுந்து கிடந்தனர். விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி பலர் தப்பி ஓடியதால் அதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.


போலீஸார் உடனடியாக மக்களை கட்டுப்படுத்தி கூட்டத்தை வெளியேறச் செய்தனர். ஆம்புலன்ஸ்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் பலர் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.


சிக்கந்த்ரா ராவ் காவல் நிலைய எல்லைப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடல்களையும் அங்கு வைக்க இடமில்லை. இதனால் மருத்துவமனை முழுவதும் உடல்களைப் போட்டு வைத்துள்ளனராம். 




இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஹத்ராஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் குமார் இதுகுறித்துக் கூறுகையியில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அங்குள்ள சுகாதார மையத்தில்தான் தற்போது  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது ஒரு தனியார் நிகழ்ச்சி. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. அதேசமயம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சில வசதிகளைச் செய்திருக்க வேண்டும். அது சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


சத்சங்கம் நடந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லை என்று தெரிகிறது. இதனால் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்து இருந்தன. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அங்கிருந்து கொண்டு வர முடியவில்லை. மக்களும் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்