மலேசியாவில் விபரீதம்.. ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி.. 10 பேர் பலி..!

Apr 23, 2024,11:19 AM IST

கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியாவில் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்களின், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட முப்பைடயினரும் வருடா வருடம் பயிற்சிகள் மேற்கொள்வர். இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.




அந்த வகையில் இந்த வருடம் மலேசியாவில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இது 90 ஆவது கடற்படை தினமாகும். இதையெட்டி   ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தது.


முதற்கட்டமாக கடற்படையினரின்   ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டரில் ஏழு பேரும்,  ஃபென்னக் ரக ஹெலிகாப்டரில் மூன்று பேரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது  எதிர்ப்பாராதவிதமாக திடீரென ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. மோதிக்கொண்ட ஹெலிகாப்யர்கள் தரையில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கின. இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். 


ஒத்திகையை காண அப்பகுதியில் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நல்ல வேலையாக ஆளில்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்