சென்னை: வட கிழக்குப் பருவ மழை நெருங்கி விட்ட நிலையில் தற்போது அவ்வப்போது தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும், புறநகர்களிலும் கால்வாய்ப் பணிகள் பல இன்னும் முடிவடையாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்துக் கால்வாய்ப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் பெரும்பாலான இடங்களில் இன்னும் 90 சதவீத அளவுக்கு பணிகள் முடியாத நிலைதான் காணப்படுகிறது.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கால்வாய்ப் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் அப்பகுதி மக்களுக்கு பெரும் அசவுகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பல இடங்களில் பள்ளம் தோண்டிய நிலையில் சாலைகளும் கூட சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில்தான் நிலைமை மோசமாக உள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கால்வாய் போடும் பணிகள் நடந்து வருகின்றன. கூடவே சாலை போடும் பணிகளும் நடைபெறுகின்றன. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்தப் பணிகள் இன்னும் முடிவடையாமல் அரைகுறையாகவே உள்ளன.
போடப்படும் சாலைகளும் கூட சரியில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. பல இடங்களில் தார்ச்சாலைகள் புதிதாக போடப்பட்டும் கூட தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் பகுதியில், திருமலை நகர் பகுதியில் பிரதானசாலையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. இந்தப் பகுதியில் ஏற்கனவே சாலைகள் மிகவும் மோசமாக இருந்து வந்தன. வருடக்கணக்கில் மோசமான சாலையில்தான் மக்கள் பயணித்து வந்தனர். இப்போது கால்வாய் அமைக்கும் பணிகளும் சேர்ந்து கொள்ளவே மக்கள் படாதபாடு பட்டு விட்டனர்.
தற்போது ஒரு பக்கத்தில் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் கால்வாய் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த கால்வாய் அமைக்கும் பணியால் மழை நீர் வடிகால் சரியாக இல்லாமல், மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண மழைக்கே தண்ணீர் வெள்ளம் போல தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகள் சரியாக போடப்படாததால் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில தெருக்களில் கால்வாய் உயர்த்திப் போடப்பட்டுள்ளதால் அந்த தெருக்கள் பள்ளமாகியுள்ளன. இதனால் இங்கு சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழை நீர் மட்டும் தேங்கினால் பரவாயில்லை. கூடவே சாக்கடையும் தேங்கி மிகப் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றன. டெங்கு பரவக் கூடிய வகையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சொல்கிறது. ஆனால் இப்படி சரியில்லாத ரோட்டைப் போட்டு வீடுகளில் மழை மற்றும் சாக்கடை நீர் தேங்கும் வகையிலான செயலை செய்தவர்களுக்கு என்ன அபராதம் போடுவது.. யார் அவர்களை தட்டிக் கேட்பது.
மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசும், அதிகாரிகளும் துரித கதியில் இதைச் சரி செய்வது. இன்னும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டால் சென்னை மற்றும் புறநகர்களின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பாதிப்பு வரும் என்று அஞ்சப்படுகிறது. அரசு தலையிட்டு போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்க துரிதப்படுத்தினால் நல்லது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}