சென்னை: ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற கமலஹாசன் தனது முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க, நேற்றே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எம்பியான கமல் தனது முதல் பதிவு இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நான் வெறும் விமர்சகனாக மட்டும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை, காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக ஆலோசனை சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}