டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுயில் பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் என கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 26 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, எல்லைக்கோடு அருகே உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்தனர். இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதனால், அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு ராணுவப் படையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. இதனால் இரு நாடுகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நேரில் சென்றார். பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பயங்கரவாதத்தால் பொதுமக்கள் எதிர்கொண்ட துயரங்களை கேட்டறிந்தார். பெரும்பாலான வீடுகளில் குண்டுகளின் தடம் அப்படியே பதிந்து இருந்தது. ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரும் சென்றிருந்தனர்.
அங்குள்ள பள்ளியில் உள்ள மாணவர்களை ராகுல்காந்தி சந்தித்து அவர்களுடன் கலந்தரையாடினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்த நீங்கள் இப்போது சற்று வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்கள். எதற்காகவும் அஞ்ச வேண்டாம். விரைவில் ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். மாணவர்கள் கடுமையாக விளையாடி உடலினை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் நண்பர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீருக்கு ராகுல் காந்தி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!
ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!
காஷ்மீரில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல்!
நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?
மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!
கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!
{{comments.comment}}