சென்னை: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்.. இந்தப் பாட்டைப் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.. அப்படியே ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி பஸ்சில் பயணிக்கும்போது காணும் காட்சிகள் நமது கண் கேமராவில் சிக்கி மனதில் வந்து நிழலாக படியும்.. அதை ஏங்க அங்கேயே வச்சு வேஸ்ட் பண்றீங்க.. அப்படியே போட்டிக்கு அனுப்பி வைங்க என்று இப்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை அழகு.. எப்ப தெரியுமா.. மழை நேரத்தில்.. அப்படி ஒரு பேரழகோடு ஜொலிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்.. அந்த நேரத்தில் பேருந்து பயணம், அதிலும் ஜன்னலோர பயணம் படு சுகமானது, சுவாரஸ்யமானது. முகத்தில் வந்து மோதும் காற்று, கடந்து போகும் மனிதர்கள், கட்டடங்கள் எல்லாமே அப்படி ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்.

இப்போதுதான் எல்லோருமே கேமராமேன் மற்றும் கேமராவுமன்தானே.. செல்லும் இடமெல்லாம் எல்லோரும் செல்போனுடன்தானே போகிறோம்.. போனை எடுத்து கிளிக்கினால் அழகான போட்டோ கிடைத்து விடும். இப்படி நீங்கள் சென்னை நகரில் பஸ்ஸில் பயணிக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை இனி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு அனுப்பி வச்சா அவங்க அதில் சிறந்ததை தேர்வு செய்து பரிசு கொடுக்கப் போறாங்க மக்களே.
இதுதொடர்பாக எம்டிசி நிர்வாகம் போட்டுள்ள எக்ஸ் பதிவில், மாநகர பேருந்துகளின் ஜன்னலிலிருந்து நம் சென்னையை கண்டிருக்கிறீர்களா? பரபரப்பான, அழகான பயணம்! சிறந்த புகைப்படங்களை வரவேற்கிறோம்! பரபரப்பான நேரத்தின் பயணம், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அர்ப்பணிப்பு, சென்னையின் மறைந்திருக்கும் அழகை உங்களின் புகைப்படம் மூலம் வெளிக்காட்டுங்கள்! சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
போட்டி தொடர்பான விவரங்களை அறிய இந்த இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்: http://bit.ly/photoguidejannal

அதேபோல போட்டியில் கலந்து கொள்ள, இந்த இணைப்புக்குப் போங்க: http://bit.ly/jannalseatphoto
இந்த போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் சுதந்திர தினம்தாங்க.. அதாவது ஆகஸ்ட் 15. பிறகென்ன மக்களே செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. ரிப்பீட்டு!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}