சென்னை: டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் - நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மீண்டும் தாத்தா ஆனார் டி.ராஜேந்தர். சிம்பு பெரியப்பாவாகி விட்டார்.
டி. ராஜேந்தர் - உஷா ராஜேந்தர் தம்பதிக்கு இலக்கியா என்ற மகளும், சிம்பு, குறளரசன் என இரு மகன்களும் உள்ளனர். சிம்புதான் மூத்தவர். தங்கை இலக்கியாவுக்கு கல்யாணமாகி குழந்தை உள்ளது. சிம்பு தான் இன்னும் மணம் புரியாமல் உள்ளார். குறளரசனுக்கும் திருமணமாகி விட்டது. அவர் இசையமைப்பாளராக இருக்கிறார்.
தந்தை டி.ராஜேந்தர்-தாய் உஷா முன்னிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். குறளரசன் சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். இதனால் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாமுக்கு மாறினார். குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதுகுறித்து அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில், அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானுமே அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என மத வேறுபாடில்லாமல் அனைத்து ஸ்தலங்களுக்கும் போய் வருகிறவன். எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ கூட அனைத்து மதங்களின் குறியீடுகளைக் கொண்டதாகத்தான் இருக்கும் என பேசியிருந்தார் டி.ராஜேந்தர்.
குறளரசனுக்கு, நபீலா என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாய்மை அடைந்திருந்த நபீலா கடந்த சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகள் மூலமாக ஏற்கனவே தாத்தாவாக புரமோஷன் ஆகியிருந்த டி.ராஜேந்தர் தற்போது இளைய மகன் குறளரசன் அப்பா ஆகியுள்ளதால், இரண்டாவது முறை தாத்தாவாகியுள்ளார் டி.ஆர். அதேசமயம், தாய்மாவாக புரமோஷன் ஆகியிருந்த சிம்பு இப்போது பெரியப்பாவாகியுள்ளார்.
எல்லாம் கரெக்டா போயிட்டிருக்கு.. சிம்பு எப்போது "முக்கியமான" புரமோஷனைப் பெறுவார்.. என்பதுதான் அனைவரின் அன்பான எதிர்பார்ப்பு + கோரிக்கையாக உள்ளது. சீக்கிரம் சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து செட்டிலாகுங்க பாஸ்!
பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!
பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
{{comments.comment}}