ஹைதராபாத்: நாளை நமதே படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் சந்திரமோகன் இன்று மரணமடைந்தார்
அவருக்கு வயது 82. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணத்தைத் தழுவினார்.
ரங்குல ரத்தினம் என்ற படம் மூலமாக 1966ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் சந்திரமோகன். அந்தப் படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான நந்தி விருதை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து பதஹரெல்ல வயசு, ஸ்ரீ ஸ்ரீ முவ்வா உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றுக் கொடுத்தது. ஏகப்பட்ட விருதுகளை வாங்கிய தெலுங்கு நடிகர் சந்திரமோகன்.
ஆரம்பத்தில் ஹீரோவாக வலம் வந்த அவர் பின்னர் காமெடியனாக, குணச்சித்திர கதாபாத்திரங்களில் பின்னர் நடிக்க ஆரம்பித்தார். தமிழிலும் இவர் நாளை நமதே படத்தில் நடித்துள்ளார். அதில் எம்ஜிஆரின் தம்பியாக நடித்துள்ளார் சந்திரமோகன்.
1975ம் ஆண்டு வெளியான நாளை நமதே படமானது, இந்தியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற யாதோங்கி பாரத் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்க அவரது தம்பியாக சந்திரமோகன் நடித்திருந்தார். இந்த ரோலில் தான்தான் முதலில் நடிக்கவிருந்ததாகவும், பின்னர் இந்த வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்து விட்டதாகவும் ஒருமுறை கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்தப் படத்தில் வரும் நாளை நமதே பாடல் மிகப் பிரபலமானது. இன்று வரை அதன் பிரபல்யம் குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஸ்ரீபிரியா தயாரித்து நடித்த நீயா படத்திலும் சந்திரமோகன் நடித்துள்ளார். அதில் இச்சாதாரி பாம்பாக அவர் வருவார். மறைந்த நடிகர் சரத் பாபுவுக்கு மிக நெருக்கமானவரான இவர், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சமயத்தில் நிறைய உதவிகள் செய்தவர் என்று கூறப்படுகிறது. மொத்தம் 932 படங்களில் சந்திரமோகன் நடித்துள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}