முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. திமுகவில் இணைந்த பாமக, நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்!

Jan 24, 2025,07:42 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள்  இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பெரியாரின் கொள்கையை திராவிட மாடல் கட்சியின் கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் திமுக சார்பில் திக, திவிக, போன்ற பெரியார் அமைப்பினர்கள் பலரும் சீமானின் பெரியார் குறித்த அநாகரிகமான பேச்சிற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர். 


இதற்காக ஆதாரம் கேட்டு சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிக்கொண்டே இருப்பதால் திமுகவினர் தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது போடப்பட்டுள்ளன.




இதற்கிடையே சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும், எந்த ஒரு செயலிலும் தன்னிச்சையாக ஈடுபடுவதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர்.


அதேபோல் பாமக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் திமுகவில் இன்று இணைந்தனர். கிட்டத்தட்ட 3000 மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவில் இணைந்தனர்.  இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

news

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

news

ஓம் சாமியே சரணம் ஐயப்பா

news

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!

news

மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!

அதிகம் பார்க்கும் செய்திகள்