சென்னை: பீகார் தேர்தலில் வெற்றி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பிஹார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
கடந்த ஆட்சிக் காலத்தில் "டபுள் இன்ஜின் சர்காராக" நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பிஹார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி! அதிலும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் அவர்களின் முக்கியப் பங்களிப்பு பிஹார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே!
ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
{{comments.comment}}