சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 16ம் தேதியன்று நாடு முழுவதும் பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் விதமாக ஜனநாயகத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியையும் சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த தேசிய பத்திரிக்கை தினத்தில் உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். சகிப்புத்தன்மைக்கு மத்தியில், பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரனாக உள்ளது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அன்புக் குழந்தை!
குழந்தைகள் காலத்தின் கண்ணாடிகள்!
ஒர் அழகிய குழந்தை!
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. குழந்தைப் பருவ நினைவலைகள்!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நிலையற்ற விலையில் தங்கம் விலை... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்தது!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}