மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள்.. தெற்கை நோக்கி அணி திரளும் தலைவர்கள்!

Feb 26, 2023,04:49 PM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை  இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாட திமுக தடபுடலாக தயாராகி வருகிறது. பல்வேறு அகில இந்தியத் தலைவர்கள் பிறந்த நாளுக்காக சென்னையில் குவியவுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உள்ளது. பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது  தென் மாநிலங்கள்தான். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் பாஜகவை மிக தூரத்தில் வைத்துள்ளன.



கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வெற்றியைக் கூட கொடுக்காத மாநிலங்கள் இந்த இரண்டு மாநிலங்கள்தான். எனவே பாஜகவுக்கு இந்த இரு மாநிலங்களும் இரு கண்களிலும் விழுந்த தூசி போல உறுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் வரும் 2024ம் ஆண்டு லோக்சபா  தேர்தலில் இரு மாநிலங்களிலும் எப்படியாவது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளே நுழைய  பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் பல்வேறு வழிகளிலும் அது தீவிரமாக பாடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் பாஜகவுக்கு ஒரு அழுத்தமான பயத்தைக் கொடுக்கவும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், இந்த பிறந்த நாளை பயன்படுத்திக் கொள்ள திமுக நினைக்கிறது. இதன் காரணமாக  ஸ்டாலின் பிறந்தநாளை எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை திமுக செய்துள்ளது. 



மார்ச் 1ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த பொதுக்கூட்டத்தை ஒரு பிரமாண்ட மாநாடு போல நடத்த திமுக திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  இதுதவிர பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, விளையாட்டு விழாக்கள் உள்ளிட்டவற்றையும் திமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒரு புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்