பக்காவாக களம் இறங்கும் நயன்தாரா.. லவ் டுடே நாயகனுக்கு "அக்கா"வாகிறார்?

Dec 09, 2023,09:51 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: லவ் டுடே படத்தின் நாயகன்  பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கப் போகும் புதிய படத்தில் சூப்பர் சர்ப்பிரைஸ் காத்துள்ளது. ஆமாங்க ஆமா.. அவரது அக்கா வேடத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் உறுதியானால் படம் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம்.


தமிழ் திரையுலகில் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரதீப். 90ஸ் கிட்ஸ் குறித்த கதைதான் கோமாளி. இதைத் தொடர்ந்து அடுத்த படத்தில் அவரே ஹீரோவாகி விட்டார்.


தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே ஓஹோவென வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது . இதில் பிரதீப், இவானா, சத்யராஜ் ,யோகி பாபு ,ராதிகா, பாரத், ரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடித்த நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். 




செல்போன்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்பதற்கு நல்ல உதாரணமாக இப்படம் அமைந்திருந்தது . மேலும் இப்படம்  நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி மக்கள் மனதை வென்றது. இதில் வந்த மாமாகுட்டி என்ற வசனம் சூப்பர் ஹிட் ஆனது. இதுதவிர மேலும் பல வசனங்களும் கூட ஹிட் ஆனது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் இது செம வேட்டையா அமைந்தது.


இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். விக்னேஷ் சிவன்தான் இப்படத்தை இயக்கப் போகிறார். இதில்தான் பிரதீப் நாயகனாக நடிக்கப் போகிறார்.. இதில் பிரதீப்பின் அக்கா வேடத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கா என்றதும் சாதாரண அக்காவாக கற்பனை செய்துக்க வேண்டாம்.. பக்கா வெயிட்டான ரோலாக இருக்குமாம்.


ஏற்கனே அதர்வாவுக்கு அக்காவாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. பிரதீப் படத்தில் அவர் அக்காவாக நடித்தால், நயன்தாராவுக்குக் கிடைத்த 2வது "திரைத் தம்பி"யாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்