குடும்பங்களுடன் கொண்டாட ரெடியா.. "யூ" சான்றுடன் ரிலீஸ் ஆனது நயன்தாராவின் அன்னபூரணி!

Dec 01, 2023,10:53 AM IST

சென்னை: நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு யூ சான்றிதழ் நேற்று கிடைத்த நிலையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.  


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இப்படம் நம்ம நயன்தாராவின் 75வது படமாகும். அன்னபூரணி படத்தில் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளி வருகின்றன. அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. 




நல்ல தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழைப் பெற்று, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷங்கரிடம் உதவிஇயக்குனராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா  இப்படத்தை இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். "உணவு" என்ற தீம் கொண்ட இந்தப் படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வசீகரமும்  முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.




இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.




இப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகுகிறது. குடும்பமாக சென்று பார்த்து பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க இருக்கிறது. சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. உலகளவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையிலான கதைக்களத்துடன் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்படம் எப்படிப்பட்ட படம்  என்பது சற்று நேரத்தில் தெரிந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்