2025ம் ஆண்டை.. 86.99 லட்சம் பயணிகளுடன்.. கோலாகலமாக தொடங்கியுள்ள சென்னை மெட்ரோ!

Feb 01, 2025,04:46 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்தாக மெட்ரோ ரயில்கள் மாறி வருகின்றன. இதையடுத்து பயணிகள் நலனுக்காக பல்வேறு வசதிகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:




சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்.


அதிகபட்சமாக 10.01.2025 அன்று 3,60,997 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2025, ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் (Online QR 1,59,162; Paper QR 18,94,376; Static QR 2,64,321; Whatsapp - 5,89,305; Paytm 4,20,389; PhonePe – 3,28,755; ONDC – 1,24,078), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.


மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்