பழமொழியும் உணவுப் பழக்கமும்.. எத்திக்கில் தேடினாலும்.. அற்புதமான ஒரு காய்தான்.. நம்ம நெல்லிக்காய்!

Mar 18, 2025,01:31 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: பித்தம் தணிக்க நெல்லிக்காய் .. இந்தப் பழமொழி கேட்டிருக்கீங்களா.. அருமையான ஒன்றுங்க.. நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுச் சென்ற அருமையான பழமொழி இது. உணவுப் பழக்கத்துக்காக கூறப்பட்டது இது.


பித்தம் தணிக்க நெல்லிக்காய்:


நமது உடல் வாதம், பித்தம் கபம் என எந்த தன்மையோடு இருந்தாலும் பெரிய நெல்லிக்காய் நம் உடலை சமன் செய்வதில் சிறந்த பங்கு வகிக்கிறது.  உடலில் உள்ள பித்தத்தை தணிக்க ஆம்லா எனப்படும் நெல்லிக்காய் அதீத நன்மை வகிக்கிறது. இதனை பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள் பிரண்ட்ஸ்.


நெல்லிக்கனி பயன்படுத்தும் முறைகள்:




1. ஒரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி நன்றாக ஜூஸ் போட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது இந்து உப்பு போட்டு குடிக்கலாம். இதனை ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக குடிக்க உடல் உஷ்ணத்தை குறைத்து பித்தம் தணிக்க உதவும்.


2. நெல்லிக்காய் தயிர் பச்சடி அதாவது நெல்லிக்காய் துருவல் அல்லது  பொடியாக கட் செய்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண்  அமிலத்தன்மை  குறையும். நெல்லி பொடியையும் தயிர் உடன் சாப்பிடலாம்.


3. நெல்லிக்கனி எலுமிச்சையுடன்: இவ்விரண்டையும் சம அளவில் ஜூஸ் செய்து தண்ணீர் கலந்து உட்கொள்ள பித்தம் குறையும்.


4. எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிது நெல்லி துருவலையும் சேர்த்து சாப்பிடலாம்.


5. நெல்லிக்காயை உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து தேன் அல்லது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.


6. நெல்லி தொக்கு செய்து இட்லி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


நெல்லிக்காயின் பயன்கள்:


* நெல்லிக்கனியில் இயற்கையாகவே தண்ணீர் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்ததால் இது பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

* இளநரை தடுக்கும்

* செரிமானத்தை மேம்படுத்துகிறது.

* இரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு கட்டுப்படும்.

* இதயத்திற்கு உகந்தது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,மற்றும் உடல் எடை குறைக்கும்.

* கண்களுக்கு மிகவும் நல்லது .

* சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது. 

* ரத்தத்தை சுத்திகரிக்கிறது .

* தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது. 

* இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. 

* நரம்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.


நெல்லிக்கனியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நிறைந்துள்ளது .உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு ,அஜீரணம், மலம் கடினமான மாற்றம் , அல்சர் ,கோபம்  வாயில் உப்பு சுவை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் ஒரே மருந்து பித்தம் தணிக்கும் நெல்லிக்கனி சிறந்த உணவாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்