பிளடி பெக்கர் படத்தோட ஒரிஜினல் ஹீரோ யார் தெரியுமா.. நெல்சன் சொன்ன ஸ்டன்னிங் தகவல்!

Oct 19, 2024,12:22 PM IST

சென்னை:   பிளடி பெக்கர் படத்தில் தனுஷ் அல்லது விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் என இயக்குநர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது என இயக்குனர் நெல்சன் இப்பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.


இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ரெடின் கின்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், அனார்கலி நாசர், அக்ஷயா ஹரிகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. 




இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக் குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். இயக்குநர் நெல்சனும் இதில் பல சுவாரஸ்ய தகவல்களைச் சொன்னார். அவரது பேச்சிலிருந்து...


 வேட்டை மன்னன் படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ஜெயிலர் படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ஜெயிலர் பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஜெயிலர் வெற்றிப் பெற்றால் மட்டுமே படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால்,  ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார்.


படம் வெற்றி பெற்றதும் ப்ளடி பெக்கர் தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர்களை சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. 




படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. 


த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு அமரன், பிரதர் படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார் நெல்சன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்