மீண்டும் மீண்டுமா... யாருக்காக இந்த போஸ்ட்?... சேம் சைட் கோல் போடும் எஸ்.வி.சேகர்!

Apr 17, 2023,12:51 PM IST

சென்னை : நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் பதிட்டுள்ள போஸ்ட்டை வைத்து, நெட்டிசன்கள் அவரை கேள்வி கேட்டும், கிண்டல் செய்தும் வருகின்றனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக.,வின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலைக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய திமுக, ரூ.500 கோடி நஷ்டஈடும் கேட்டுள்ளது. ஆனாலும் அண்ணாமலை விடாமல் தொடர்ந்து திமுக.,விற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். இந்த ஊழல் பட்டியல் தொடர்பாக சிபிஐ.,யில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். 



அதிமுக., முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் திமுக பற்றி குறிப்பிட்ட அண்ணாமலை, திமுக.,வின் சிவப்பு பாதை திறந்து விட்டதாக கூறி இருந்தார். அதேபோல முன்பு விமானத்தில் அவசர கால கதவைத் திறக்கப் போய் பெரும் சர்ச்சையில் அண்ணாமலையும், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும் சிக்கினர். இந்த விவகாரத்தில் பின்னர் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்ததால் அது அமுங்கிப் போனது.

இந்த நிலையில் இதையெல்லாம் மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக பாஜக.,வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

விமானத்தில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட எக்சிட் கதவு பக்கத்தில் அமர்ந்த படி எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர், டேக் ஆஃப் செய்ய ரெடி. இதில் உள்குத்து ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். பாஜக.,வில் இருந்து கொண்டு அவரது கட்சியை சேர்ந்த ஒருவரையே மறைமுகமாக கிண்டல் செய்வது போல் போஸ்ட் பதிவிட்டுள்ளாரே... வேண்டுமென்றே அந்த சீட்டில் உட்காந்து செஃபி எடுத்து பதிவிட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்