சென்னை: திரைப்படங்களில் கேப்டனின் பாடலை பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் பெருந்தன்மையோடு கூறியுள்ளார். இது விஜயகாந்த் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வரிசையில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் சமீபகாலமாக ஹவுஸ் புல் காட்சிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. அதிலும் அட்டகத்தி தினேஷ் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான அட்டகத்தி தினேஷ், கிரிக்கெட் மைதானத்துக்குள் என்ட்ரி ஆகும்போது, விஜயகாந்த் படத்தில் வரும் பிரபல பாடலான" நீ பொட்டு வெச்ச தங்க குடம்" பாடல் ஒலிக்கும். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தியேட்டர்களில் இப்பாடல் ஒலிக்கும் போது ரசிகர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இப்பாடல் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், படங்களில் விஜயகாந்த் பற்றிய காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படங்களில் கேப்டனின் பாடல்கள், போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை எல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம்.கேப்டன் எங்களின் சொத்தல்ல. மக்களின் சொத்து. சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படத்திலும் கேப்டன் நடித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}