டெல்லி: மத்திய அரசு புதிய வருமான வரி மசோதா 2025-ஐ திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான லோக்சபா குழு அளித்துள்ள 285 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய நோக்கம், இந்தியாவின் வரி சட்டங்களை நவீனமயமாக்கி எளிதாக்குவதே ஆகும். குழப்பத்தை தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களையும் ஒரே வரைவில் ஒருங்கிணைக்கவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகப்படுத்தினார். ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

வெள்ளிக்கிழமையை புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் மசோதாவை தாக்கல் செய்வது திங்கட்கிழமைக்கு தள்ளிப்போனது. 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது.
புதிய மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சட்டத்தின் முக்கிய கொள்கைகள் அப்படியே இருக்கும். ஆனால், சட்டத்தின் அமைப்பு மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். வரி செலுத்துவதை எளிதாக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வரி செலுத்துபவர்கள் நிபுணர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}