ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

Dec 12, 2024,06:09 PM IST

மேஷ ராசிக்காரர்களே...இயற்கையாகவே தலைமை பண்பும், பொறுப்பும், தனித்துவமான சிந்தனையும் கொண்டவர்கள் நீங்கள். எந்த விஷயத்தை செய்வதாக இருந்தாலும் உங்களுக்கு என்ற தனி பாணி வைத்திருப்பீர்கள். அநீதியை கண்டு பொறுக்காதவர்கள் நீங்கள். தன்னம்பிக்கையும், எதையும் எதிர்கொள்ள துணிச்சலும் மிக்கவர்கள் நீங்கள். இருந்தும் உணர்ச்சிவசப்படும் குணத்தை பொறுமையை இழக்கும் குணத்தால் பல சமயங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள்.


பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் தேடி வந்து குடியும் ஆண்டாக இருக்க போகிறது. இருந்தாலும் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வதால் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் இனி இருக்காது. அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சாதமான பலன்கள் ஏற்படும்.




வீட்டில் விசேஷங்கள் அணிவகுக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும். பெருமைகளும் தேடி வரும். உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது உடல் நலத்தை காக்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.


செலவுகளை திட்டமிட்டு செய்தால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் முழு முயற்சி, கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் தான். லாபமும் தடையின்றி அதிகரிக்குள். முதலீடுகள் செய்யும் போது சிந்தித்து முடிவு எடுங்கள். யாருக்கும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் யோசித்து விட்டு செயல்படுங்கள். 


கலை துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் சோம்பலை தவிர்த்து முழு கவனம் செலுத்தினால் படிப்பில் சாதனை படைக்கலாம். உடல்நிலையில் நரம்பு, தலைவலி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. பயணங்களின் போது நிதான போக்கை கையாள வேண்டும். 


பெண்கள் எதிலும் அவசரம் இன்றி நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொன், பொருள் மீதான ஆசை அதிகரிக்கும். புகுந்த இடத்தில் உங்களின் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 


வழிபாடுகள் : புத்தாண்டில் மேஷ ராசியினர் மனக்குழப்பங்கள், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, இருக்கும் பிரச்சனைகள் நீங்க திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் செந்தில் ஆண்டவரை வழிபடுவது நன்மை உண்டாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்