ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

Mar 19, 2025,06:32 PM IST

சென்னை:  நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில், தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து  தப்ப முடியாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.


நெல்லை மாவட்டம், டவுன் பள்ளிவாசலுக்கு ரமலான் நோன்பு திறப்பதற்காக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் சென்றார். அங்கிருந்து தொழுகை முடித்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 




குற்றவாளிகள் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனே சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். சுற்றிச் சுற்றி வருகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் காவல்துறை உதவி ஆணையர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரது பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் பள்ளிவாசலுக்கு அருகிலேயே வைத்து அவர் கொலை செய்யப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசுகையில், ஜாகிர் உசேனுக்கு ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புகார் அளித்துள்ளார். விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 


இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார். இதில் நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேனுக்கும், தெளபீக் என்பவருக்கும் ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த  கொலை வழக்கில் இருவர் சரண் அடைந்துள்ளனர். பிற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனையில் திமுக கடுமையாக இருக்கும் என கூறினார்.


இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்


இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆணையர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்