சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 அதிரிடியாக குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,200க்கும் ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் லேசாக குறைந்துள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்திருந்த தங்கம் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது. வெளியிலும் மழை பெய்வதால் கடைக்கு இப்ப எப்படிப்பா போறது.. இருந்தாலும் விட்ரக் கூடாது.. நனஞ்சுட்டே போயாவது ஏதாச்சம் வாங்கிடனும்ங்கிற அளவுக்கு மக்கள் ஹேப்பியாகியுள்ளனற்.
ஐப்பசி மாதத்தில்ல் சுபமுகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால், நகை விலை குறையாது என்று இருந்த மக்களுக்கு இன்று திடீர் என நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது தங்கம் விலை. இதனால் இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறைவிற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இன்றைய விலை குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறைவிற்கான காரணம்
இந்த திடீர் விலை குறைவிற்கு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதே முக்கியக் காரணம் என்கிறார்கள். தங்கம் விலை பெரும்பாலும் அமெரிக்க சந்தை நிலவரத்தை பெருத்தே அமைகிறது. நேற்று டிரம்ப் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தை விடுத்து, பங்குச்சந்தைகளில் தங்களது முதலீடுகளை திருப்பினர். தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.
சென்னையில் இன்றைய (7.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,20,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,856 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,848 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,560 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,85,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,856க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,856க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,856க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,856க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,856க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,861க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,020 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}