சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியைக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான 18 வது ஐபிஎல் லீக் தொடர் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியையும் பதிவு செய்தது.
அதேபோல் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி நடைபெறும் போது இறுதி 19 ஆவது ஓவரில் களமிறங்கிய தல தோனி விண்ணிங் சாட் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் இரண்டு பந்துகள் பிடித்த தோனி டிபன்ஸ் மட்டுமே வைத்து ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ரச்சின் ரவிந்த்ரா ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை நிலைநாட்டினார். சென்னை அணியின் முதல் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டி உற்சாகமாக போட்டியை கண்டு களித்தனர். அதே சமயத்தில் தோனி ரன் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தல தரிசனத்தை கண்டு விட்டோம் என ரசிகர்கள் உற்சாகத்துடன் வலம் வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்த அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
ஏனெனில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியில் தோனி இருக்கும்போதே பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார் அல்லது வேறு எந்த அணி வெற்றி வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 28ஆம் தேதி ஆர் சி பி மற்றும் சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 10:15 மணிக்கு தொடங்குகிறது. 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஒரு டிக்கெட்டின் விலை ₹ 1700 முதல் 7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}