டிராக் ஓகே.. கிளம்பிருச்சு மலை ரயில்.. மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரயில் சேவை!

Dec 23, 2023,11:00 AM IST

ஊட்டி: 3 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததது (குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான்).. ரயில் பயணம்தான்.. அதுவும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு வேகமாக ஓடும் சாலைகளையும், மரங்களையும் பார்த்து ரசிப்பது போல வருமா சொல்லுங்க..!

அதிலும் மலைப் பகுதிகளில் பயணிப்பது செம ஜாலியானது மட்டுமல்ல திரில்லானதும் கூட. தமிழ்நாட்டில் உள்ள ஒரே மலை ரயில் நம்ம ஊட்டி மலை ரயில்தான். மேட்டுப்பாளையத்திலிருந்து இது இயக்கப்படுகிறது. வெள்ளையர் காலத்தில் அறிமுகமானது இந்த ரயில் போக்குவரத்து.. மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு இடையே வளைவு நெளிவான பாதையில் ஒரு அமைதியான திரில்லிங் சவாரி தருவது இந்த ஊட்டி மலை ரயில். 



இதில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தனித்துவ அனுபவத்தையும் இந்த சேவை நமக்கு தருகிறது. ஆனால் ஏதாவது இடர்பாடுகள் ஏற்பட்டால் ரயில் டிராக் பாதிக்கப்பட்டால், ரயில் சேவை நிறுத்தப்படும். குறிப்பாக மழைக்காலத்தில்தான் அதிக அளவில் இடர்பாடுகள் ஏற்படுவது வழக்கம்.

சமீபத்தில் குன்னூர் பகுதியில் கனமழை பொழிந்ததால், இந்த மலை பாதை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில் பாதையில் பாறைகள், மண் சரிந்தது. இதனால் ஊட்டி ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ரயில் பாதையில் இருந்த மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்டு தற்போது ரயில் சேவை தொடங்கியுள்ளது. 3 நாட்களுக்கு பின்னர் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படுவது வழக்கம். மீண்டும் ரயில் ஓடத் தொடங்கியதால்  பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள்நாட்டுப் பயணிகளோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் இதில் பயணித்தனர். தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிக அளவிலான கூட்டம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்