ஹேப்பி.. 16ம் தேதி முதல் ஓடும் "ஜிகுஜிகு" மலை ரயில்...  குளு குளு ஊட்டிக்கு!

Sep 12, 2023,12:48 PM IST
ஊட்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் சிறப்பு மலை ரயில் வருகிற 16-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான ரயில் சேவை இது. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் மலைகளின் அரசி ஊட்டியை மலை ரயிலில் பயணித்து கண்டுகளித்தபடியே செல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.



மலை ரயில் அவ்வப்போது நிறுத்தப்பட்டு விடும். குறிப்பாக சீசன் சமயத்தில்தான் அதிக அளவில் இயக்கப்படும். இந்த நிலையில்,  பண்டிகை காலத்தில் வரும் தொடர் விடுமுறைகளால் மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே வரும் 16ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,

சுற்றுலா பயணிகள் வசதிக்காக மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகின்ற 16,30ஆம் தேதி, அக்டோபர் 21,23  மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே வருகின்ற 18ஆம் தேதி  மற்றும் அக்டோபர் 2, 22, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் இருந்து காலை 9 .10 மணிக்கு புறப்படும். இதே போல் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் வருகின்ற 17 ,18 அக்டோபர் 1 , 2 தேதியும் ,ஊட்டி-குன்னூர் இடையே வருகின்ற 16, 17 ,30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 8 .20 மணிக்கும் ,ஊட்டியில் இருந்து குன்னூர் மாலை 4:45 மணிக்கும் ரயில் புறப்படுகிறது.

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகள் உடன்  ரயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் கூடுதலாக 40 இருக்கைகள் சேர்த்து 80 இருக்கைகளுடனும் ,
இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடன் ரயில் இயக்கப்படும். இது தவிர ஊட்டி -கேத்தி இடையே மூன்று முறை சிறப்பு ரயில் வருகின்ற 17 மற்றும் அக்டோபர் 1 தேதி இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்