சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக குழு இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது புகார் மனு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தப் பணத்தில்தான் தேர்தலை திமுக சந்திப்பதாக சொல்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை இந்த விஷயத்தில் சரிவர செயல்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பள்ளிப் பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே போனால் அடுத்த 7 வருடங்களில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் மையமாக மாறியிருக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கி மனுவாக அளித்துள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநரிடம் அளித்த மனுவில், எங்கெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}