சென்னை : அதிமுக.,வை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாடு பாஜக., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் செங்கோட்டையன் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரது பின்னணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, அமமுக தலைவர் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே சட்டசபை தேர்தலில் அதிமுக.,வால் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.

கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவரது பெயரை குறிப்பிடாமல் ,முன்னாள் முதல்வர், பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டார். அதே போல் 2009ல் இவரே ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான். அதனால் மறப்போம் மன்னிப்போம் என பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றார். பிரிந்தவர்களை ஒன்றிணைக்காத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே அது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைப்பவர் செங்கோட்டையன். அனைவரையும் சேர்க்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை ஆதரிக்கிறேன். அதை தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். அதிமுக.,தொண்டர்களை யாராலும் கட்சியில் இருந்து வெளியேற்ற முடியாது. கட்சி ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படையாக வலியுறுத்தி உள்ளார் என்றார்.
ஒன்றிணைந்த அதிமுக என்பதையே நாங்களும் வலியுறுத்துகிறோம் என செங்கோட்டையனின் பேச்சிற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}