சென்னை: திருச்சியில் ஏப்ரல் 24ம் தேதி முப்பெரும் விழாவைக் கொண்டாடப் போவதாக ஓ.பன்னீர் செல்வம் அணி அறிவித்துள்ளது.
சென்னையில் ஓபிஎஸ் அணி சார்பில் அதன் தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,
அவர்கள் (எடப்பாடி பழனிச்சாமி அதிமுக) சார்பில் கூட்டப்படும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அது சட்ட விரோதக் கூட்டமாகும். அது செயற்குழுக் கூட்டமாகஇருந்தாலும் சரி எந்தக் கூட்டமாக இருந்தாலும் அது செல்லாது.
சர்வாதிகாரமாக கழகத்தின் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளனர். இவர்கள்திருத்திய கழக விதிமுறைப்படி பண மூட்டையுடன் கூடியவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளனர். அதை எதிர்த்துத்தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
அவர்கள் நடத்திய பொதுக்குழுவே போலியானது. எனவே பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு செல்லும் என்று அவர்கள் சொல்வது அபத்தமானது.
நாங்கள் உச்சபச்ச பதவிகளுக்குப் போட்டியிடுவோம் என்றுதான் கூறி வருகிறோம். உச்சபச்ச பதவி என்பது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான். பொதுச்செயலாளர் பதவி அல்ல.. கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.
ஈரோடு கிழக்கில் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம். சின்னத்தை விட்டுக் கொடுத்தோம். போட்டியிடாமல் ஒதுங்கினோம். அப்படி இருந்தும் 60,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கிறார்கள் என்றால் அது மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டார்கள் என்றுதானே அர்த்தம். இப்படியே அவர்கள் தொடர்ந்து செயல்பட்டால் மக்கள் தொடர்ந்து அவர்களைப் புறக்கணிப்பார்கள்.
தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் வேடம் போட்டுக் கொண்டதைப் பார்த்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை வரும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஆளுநர் கூறியது கருத்து கருத்துக் கூற விரும்பவில்லை.
திருச்சியில் வருகிற 24ம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் அதிமுகதோற்றுவிக்கப்பட்டதன் 51வது ஆண்டு விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா நடத்தவுள்ளோம். அதில் கட்சித் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை நிரூபிப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுகவின் சக்தியை அங்கு நாங்கள் கட்டுவோம் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}