ஒத்த ஓட்டு முத்தையா.. "டக்கராக ரீ என்ட்ரி" கொடுக்கும் கவுண்டமணி.. ஷூட்டிங் முடிஞ்சிருச்சுப்பா!

Feb 19, 2024,02:55 PM IST

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பின் காமெடி கிங் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததுள்ளது. இப்படம் மே மாதம் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படம் டக்கராக வந்துள்ளதாம்


80,90களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. அவர் நடித்த படங்களில் காமெடி புயலே வீசும் என்பதால், தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவருடைய காமெடியை ரசிக்கவே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட காமெடி நடிகரின் நகைச்சுவைகளை இன்று வரை ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து ரசித்தும், கலாய்த்தும் வருகின்றனர். 




கவுண்டமணி திரையில் தோன்றி பல வருடங்கள் ஆகி விட்ட நிலையில், தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். காமெடி கிங் கவுண்டமணி மற்றும் யோகி பாபுவின் கலக்கலான கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. கவுண்டமணியின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் மைய கதையாக அமைந்துள்ளதாம். மேலும் இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் முற்றிலும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளதாம்.




இப்படத்தை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் கவுண்டமணிக்காக புகழ் பெற்ற காமெடி டிராக்கை எழுதிய நகைச்சுவை வசனகர்த்தா ஆவார். சைன் கிராஃட் ப்ரொடக்சன் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் தயாரித்துள்ளார். இதில் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஓ.கே சுந்தர், ஸ்ரீ ரங்கநாதன், ராஜேஸ்வரி, சிங்கமுத்து, தாரணி, வையாபுரி, முத்துக்காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஸ்ரீ, இயக்குனர் சாய் ராஜகோபாலன், டி.எஸ் ஆர் சீனிவாசன், சென்ராயன், கூல் சுரேஷ், சதீஷ் மோகன், காதல் சுகுமார், சிசர் மனோகர், ஆதேஷ் பாலா, மங்கி ரவி, பெஞ்சமின், கொட்டாச்சி, விஜய கணேஷ், லொள்ளு பழனியப்பன், நளினி சாமிநாதன், மணவை பொன் மாணிக்கம், பத்மநாபன், குணாஜி, காஞ்சிபுரம் பாய் கண்ணதாசன், மதுர நாயகம், போண்டா மணி, சின்ராசு, அனு மோகன், ரேவதி, மணிமேகலை, ஆர் டி எஸ் சுதாகர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 




இந்த படத்தில் 3 இளம் நடிகைகளுக்கு ஜோடியாக நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி,  நாகேஷ் பேரன் கஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மீண்டும் கவுண்டமணியை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்