- பாவலர் மாயோன் மங்கை
ஆத்தோரம் நாணலிலே
அழகாய் விளையாடி
ஊத்தோரம் ஓலை கட்டி
ஒத்துமையா விளையாடி
செந்நெல்லுச் சோறாக்கி
சேம்பிலை மேல் பரப்பி
கையறுத்துக் கறிசமைத்து
நகைசொல்லி உறவாடி
கட்டிளங்காளை அவன்
கருப்பண்ண சாமி அவன்
காலால் இடறி விட்டான்
காதல் மொழி பேசினானே

காதலை வார்த்து விட்டுக்
காற்றாய்ப் பறந்தானே
பறந்தவனை மறவேனே
பக்குவமா முடிந்தேனே
வீட்டில் நான் தனித்திருக்க
விளையாட நினைத்தானோ
உண்ணும் நீர் கேட்டான்
உணராது நான்தந்தேன்
வளைக்கரம் பற்றிநின்றான்
வலிந்து மார் கொண்டான்
பிடியிடையை விரல் தடவ
பித்தாகி நான் நின்றேன்
இன்பமே எனக்கு என்று
இனியரிடம் நீ சொல்லேன்
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}