டெல்லி: 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்மபூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
நடிகர் அஜீத்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றோரில் 23 பேர் பெண்கள் ஆவர். 10 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 வயது சுதந்திர போராட்ட வீரர், நோக்லாக்கை சேர்ந்த பழ விவசாயி, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என பலருக்கும் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் கொடுத்து கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வில்வித்தை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற அரியானாவின் கைதல் பகுதியை சேர்ந்த ரன்விந்தர் சிங், 1955ம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆட்சிக்கு எதிராக உள்ளூர் வானொலி சேவையை துவக்கி, மக்களை ஒருங்கிணைத்து, கோவாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த லிபியா லோபா சர்தேசி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டுபிடித்து, அதை தடுக்கும் முறைகளை கண்டுபிடித்த டில்லியை சேர்ந்த கைலகாலஜிஸ்ட் நீரஜ் பட்லா, 22 வயதில் முஷாஹர் சமூகத்தை ஒருங்கிணைக்க பணியாற்றி சமூக ஆர்வலர் போஜ்பூரை சேர்ந்த பீம் சிங் பர்வேஷ், கடந்த 50 ஆண்டுகளாக தென்னிந்திய பாரம்பரிய தவில் வாத்திய கலைத்துறையில் சேவையாற்றி வரும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் நோக்லாக் பகுதியை சேர்ந்த பழ விவசாயி ஹங்திங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதுமையான பழ வகைகளை பயிரிட்டு வருவதற்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் முழுவிவரம்:
பத்ம விபூஷண் (7 பேர்)
துவ்வூர் நாகேஸ்வர் ரெட்டி, நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹார், குமுதினி ரஜினிகாந்த் லாகியா, எல். சுப்ரமணியம், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓசாமு சுசுகி, சாரதா சின்ஹா.
பத்ம பூஷண் (19 பேர்)
சூர்ய பிரகாஷ், நடிகர் ஆனந்த் நாக், பிபேக் தேப்ராய், ஜதின் கோஸ்வாமி, ஜோஸ் சாக்கோ பெரியப்புரம், கைலாஷ் நாத் தீக்ஷித், மனோகர் ஜோஷி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா, பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பங்கஜ் படேல், பங்கஜ் உதாஸ், ராம்பகதூர் ராய், சாத்வி ரிதம்பரா, நடிகர் எஸ். அஜீத் குமார், சேகர் கபூர், நடிகை சோபனா சந்திரகுமார், சுசில் குமார் மோடி, வினோத் தம்
பத்மஸ்ரீ விருது (113 பேர்)
தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவாயூர் துரை, கே.தாமோதரன், எல். ராமசுப்பய்யர், எம்.டி. ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் உள்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் 2025 - முழுப் பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}