- ஸ்வர்ணலட்சுமி
கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான திருநாளாக கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை தீபம் தான். சிவ பெருமான், மகாவிஷ்ணுவிற்கும், பிரம்ம தேவருக்கும் ஜோதி வடிவமாக காட்சி அளித்த நாளையே திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் வீடுகள் முழுவதிலும் நிறைய தீபங்கள் ஏற்றி, இறைவனை ஜோதி வடிவமாக வழிபடுவோம்.
கார்த்திகை தீபம் மொத்தம் மூன்று நாட்கள் ஏற்றவோம். முதல் நாள் பரணி தீபம், 2ம் நாள் திருகார்த்திகை தீபம், 3ம் நாள் பாஞ்சராத்திர தீபம். இவற்றில் பரணி தீபம் முன்னோர்களுக்காகவும், திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காகவும் ஏற்றுவதை போல், பாஞ்சராத்திர தீபம் மகாவிஷ்ணுவிற்காக ஏற்றப்படுவதாகும். மகாவிஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி உலகத்தை காத்த நாளை தான் விஷ்ணு கார்த்திகை என்று வைணவர்கள் கொண்டாடுவார்கள். இந்நாளில் நாம் ஏற்றப்படும் தீபம் தான் பாஞ்சராத்திர தீபம் என்று கூறுவர்.
பாஞ்சராத்திர தீபம் ஏற்றுவதற்கு ஒரு கதையும் உண்டு. பிரம்ம தேவர் ஒருமுறை, சரஸ்வதி தேவிக்கு தெரியாமல் யாகம் ஒன்றை செய்தார். கலைமகளுக்கு கோபம் வராது என்று நினைத்தார். ஆனால் சரஸ்வதி தேவியே மிகுந்த கோபம் அடைந்து, உலகம் முழுவதையுமே இருளாக்கினார். பிரம்ம தேவரால் யாகத்தை தொடர முடியவில்லை. அதனால் அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று சரணடைந்தார். மகாவிஷ்ணு, பிரம்ம தேவருக்கு உதவினார். விஷ்ணு, ஜோதி வடிவமாக தோன்றிய உலகின் இருளைப் போக்கினார். மகாவிஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றிய நாள் தான் பாஞ்சராத்திர தீபம் என்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
இந்த ஆண்டு கார்த்திகை 28ஆம் நாள் அதாவது டிசம்பர் 13ஆம் தேதி சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கார்த்திகை 29ஆம் நாள் டிசம்பர் 14ஆம் தேதி மகாவிஷ்ணுவிற்கு கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் ஐந்து தீபங்கள் பூஜை அறையில் ஏற்றி வழிபட வேண்டும். பாஞ்சராத்திர தீபத்தன்று மாலை 6 மணிக்கு கோலமிட்டு தீபங்கள் ஏற்றி பெருமாள் மந்திரங்களை சொல்லி, பெருமாளுக்கு பிரியமான நைவேத்தியங்களான புளியோதரை, தயிர் சாதம், பொங்கல் போன்றவற்றை படைத்து தீப துப ஆராதனை செய்து வழிபட குடும்பத்திலும் தொழிலிலும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல், மன அமைதி, உயர்ந்த வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.
5000 ஆண்டுகள் தவத்தின் பலன் தரும் பெருமாள் மந்திரம் :
ஸ்ரீய காந்தாய கல்யாண
நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய
ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலதீஸம்
ஸ்ரீ யாத் யாஸித் வக்ஷஸம்
ஸ்ரித சேதன மந்தாரம்
ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}