சென்னை: பராரி படத்தில் நடித்து வரும் நடிகை சங்கீதா கல்யாண் குமார் வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றுவதே எனது கனவு என்று கூறியுள்ளார்.
பக்கத்து வீட்டுப் பெண் என்ற உணர்வை ஒரு சில நடிகைளே ரசிகர்களுக்கு தருவார்கள். இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர். தமிழ் சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளியான 80ஸ் பில்டப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் சங்கீதா கல்யாண் குமார். இதனை தொடர்ந்து தற்போது ராஜ முருகனின் தயாரிப்பில் எழில் பெரிய வாடி இயக்கிய பராரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் அவரது அற்புதமான, இயல்பான தோற்றம், திரை ஈர்ப்பு நடிப்பு ஆகியவை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சங்கீதா கல்யாண் குமார் நிச்சயம் ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவார் என்பது சந்தேகமில்லை என கூறுகின்றனர். தனது திரையுலக பயணம் குறித்து சங்கீதா கூறுகையில்,

ஒரு நடிகை ஹீரோயினாக மட்டுமே படத்தில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.கதைக்கு தேவைப்படும் வலுவான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம். வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், போன்ற இயக்குனர்கள் பல நடிகைகளுக்கு இது போன்ற நம்பிக்கை கூறிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனது கனவு.
கார்கி, மகாநதி, அருந்ததி, சீதாராமம் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த திரைப்படங்கள் ஒருபோதும் பழையதாகாது. வருடங்கள் செல்லச் செல்ல இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். இந்த படங்களில் நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி, மற்றும் மிர்ணால் தாக்கூர் ஆகியோர் தங்களின் நடிப்பின் மூலம் இந்த படங்களில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கின்றனர். எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனக்கும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}