பாரீஸ் ஒலிம்பிக் 2024 : பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி...52 வருட கனவு நிஜமானது

Aug 08, 2024,09:25 PM IST
பாரீஸ் : பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 52 வருட கனவு நிஜமாகி உள்ளது. 

ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. தொடர்ந்து இரண்ட ஒலிம்பிக் போட்டிகளிலும் ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வென்றுள்ளதன் மூலம் இந்தியாவின் 52 வருட கனவு நிஜமாகி உள்ளது.




இதற்கு முன் இந்தியா 1968 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தான் தொடர்ந்து ஹாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது. அதற்கு பிறகு ஹாக்கியில் தொடர்ந்து பதக்கம் வெல்வது என்பத இந்தியாவிற்கு கனவாகவே இருந்து வந்தது. ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதற்கு இந்தியா ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளதால், நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெறும் நான்காவது பதக்கம் இதுவாகும். இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியின் முதல் பாதியின் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இரண்டாவது பாதியில் இந்திய அணி போட்ட கோல்களால் இந்தியாவின் கை ஓங்கியது. கடைசி வரை போராடி வெண்கல பதக்கத்தை தக்க வைத்தது இந்திய ஹாக்கி அணி

இந்திய அணி பெற்ற இந்த பதக்கம் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜிஸிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான பதக்கமாகும். மூத்த வீரரான ஸ்ரீஜிஸ் பங்கேற்றும் கடைசி ஹாக்கி போட்டி இதுவாகும். தொடர்ந்து இரண்டு வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியிலும் விளையாடிவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்