'ம்'

Jul 28, 2026,02:34 PM IST
- பசுங்கிளி

தமிழில் எனக்கு பிடித்த எழுத்து 'ம்'
பிறந்தவுடன் அம்மாவிடம் பேசியது 'ம்'
அம்மா எனக்கு தந்த முதல் முத்தம்
என் கன்னம் சிவந்தது நித்தம்
முத்தத்தில் வந்தது சத்தம்
அதில் இருக்கும் ஆயிரம் அர்த்தம்

குழந்தை பருவத்தில் நடக்கும் போது அச்சம்
பள்ளி பருவத்தில் இன்பம்
கன்னி பருவத்தில் வெட்கம்
இடைநிலை பருவத்தில் சலனம்
திருமண பருவத்தில் மௌனம்



திருமணத்திற்கு பின் 'ம்'
புகுந்த வீட்டின் உபதேசம்
இன்பத்திலும் 'ம்'
துன்பத்திலும் 'ம்'
துயரத்திலும் 'ம்'
அனுசரணையில் 'ம்'

'ம்' என்ற சொல் தாரக மந்திரம்
'ம்' என்று சொல்வோம் அனைவருடைய அன்பையும் வெல்வோம்

என்னோடு பயணிக்கும்
அனைத்து படைப்பாளிகளுக்கும்
என் கவிதையை படிப்பவர்களுக்கும்
என் கவிதைகள் பிடிக்கும்
என்று என் மனம் நினைக்கும்
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த
வணக்கம்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்