பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.. அந்த 16 என்னன்னு தெரியுமா?

Jan 29, 2026,04:13 PM IST
- ப.ந.ராஜேஷ் கண்ணா

தை பிறந்தால் வழி பிறக்கும், ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் எனத் தமிழர்களின் வாழ்வில் பழமொழிகள் இரண்டறக் கலந்துள்ளன. அந்த வரிசையில், நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வாழ்த்து: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

இங்கே பதினாறு என்பது 16 குழந்தைகளைக் குறிப்பதல்ல; ஒரு மனிதன் தன் வாழ்வில் முழுமை பெறத் தேவையான 16 வகையான செல்வங்களைக் குறிக்கிறது. அபிராமி பத்தர் அருளிய 'அபிராமி அந்தாதி' பாடல் வரிகளின் அடிப்படையில் அந்த உன்னதமான 16 பேறுகளை விரிவாகக் காண்போம்.



அபிராமி பத்தர் தனது பாடலில், அன்னை அபிராமியிடம் வேண்டுவதாக அமைந்த அந்தப் பட்டியல் இதோ:

1. கலையாத கல்வி - மறக்கப்படாத, நிலையான அறிவு; எக்காலத்திலும் கைக்கொடுக்கும் கல்வி. 2. குறையாத வயது - நீண்ட ஆயுள்; முதுமையிலும் குறையாத உடல் வலிமை. 3. கபடு வாராத நட்பு - சூதுவாது இல்லாத, உண்மையான நண்பர்கள் கிடைத்தல். 4. குன்றாத வளமை - குறையாத செல்வம் மற்றும் செழிப்பான வாழ்க்கைச் சூழல். 5. குன்றாத இளமை - முதுமையிலும் இளமையான தோற்றமும், சுறுசுறுப்பான மனநிலையும். 6. கழுபிணி இலாத உடல் - தீராத நோய்கள் அற்ற ஆரோக்கியமான தேகம். 7. சலியாத மனம் - தோல்விகளால் சோர்வடையாத, எதற்கும் கலங்காத மன உறுதி. 8. அன்பு அகலாத மனைவி - ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் அன்பான வாழ்க்கைத்துணை. 9. தவறாத சந்தானம் - நற்பண்புகள் மிக்க பிள்ளைச் செல்வம்; வம்சம் தழைத்தல். 10. தாழாத கீர்த்தி - எக்காலத்திலும் மங்காத நல்ல புகழும் மரியாதையும்.11. மாறாத வார்த்தை - கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை மற்றும் வாய்மை. 12. தடைகள் வாராத கொடை - வறுமையின்றி மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை. 13. தொலையாத நிதியம் - அழியாத சொத்துக்கள் மற்றும் முறையான நிதி மேலாண்மை. 14. கோணாத கோல் - நேர்மையான நிர்வாகத் திறன் மற்றும் நடுநிலை தவறாத பண்பு. 15. துன்பம் இல்லாத வாழ்வு - மன அமைதியைக் குலைக்கும் பெரும் துயரங்கள் இல்லாத வாழ்க்கை.16. துய்ய பாதத்தில் அன்பு - இவை அனைத்திற்கும் மேலாக, இறைவனின் திருவடியில் மாறாத பக்தி.

சில இலக்கிய ஆதாரங்களில், வாழ்வின் அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்டு கீழ்க்கண்ட 16 பேறுகளும் குறிப்பிடப்படுகின்றன: புகழ், கல்வி, வீரம், வெற்றி, குழந்தை, துணிவு, செல்வம், தானியம், இன்பம், ஞானம், அழகு, சிறப்பு, குடியிருப்பு, நோயின்மை, நலமனம், நீண்ட ஆயுள். 

இவை ஒரு மனிதனின் உடல், மனம், செல்வம், குடும்பம் மற்றும் ஆன்மீகம் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியவை. 

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது வெறும் வாழ்த்து மட்டுமல்ல; அது ஒரு முழுமையான வாழ்க்கையின் வரைபடம். பொருள் செல்வம் மட்டுமே வாழ்க்கை ஆகாது; நல்ல உடல்நலம், தெளிந்த அறிவு, சிறந்த நட்பு, மாறாத பக்தி ஆகிய அனைத்தும் சேரும்போதுதான் ஒரு மனிதன் இப்பூமியில் பாக்கியசாலியாகக் கருதப்படுகிறான். 

இந்த 16 பேறுகளையும் பெற்று, உங்கள் வாழ்வு வசந்தமாக அமையட்டும்!

(RAJESH KANNA.B N, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT., BT Asst, GMHSCHOOL, TIRUR, IRUVALLUR DISTRICT)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்