கிலோ ரூ.60 தக்காளியை வாங்க 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்

Aug 06, 2023,10:19 AM IST
சென்னை : கிலோ ரூ.60 என்ற விலைக்கு கூட்டுறவு மையங்களில் விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்காக சென்னை மக்கள் 5 மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்று வருகின்றனர்.

தக்காளி விலை நாடு முழுவதும் தாறுமாறாக ஏறிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 முதல் 180 வரை உயர்ந்தது.

தென்மாநிலங்கள் பரவாயில்லை என்னும் சொல்லும் அளவிற்கு வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 ஐயும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

தக்காளி விலை உயர்வின் காரணமாக தக்காளி ஏற்றி வரும் லாரியையே கடத்திய சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல வழிகளிலும் முயன்று வருகின்றன. சந்தைகள், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாமானிய மக்களின் கஷ்டங்களை போக்குவதற்காக குறைந்த விலைக்கு அரசு கூட்டுறவு மையங்கள் மூலமும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.



சென்னையில் 5 இடங்களில் உள்ள கூட்டுறவு மையங்களில் ரூ.60 என்ற விலைக்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கூட்டுறவு மையத்தில் ரூ.60 க்கு தக்காளி வாங்குவதற்காக நூற்றுக்கும் அதிகமான மக்கள் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சென்னையில் தற்போது தக்காளி விலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.160 க்கு விற்கப்பட்ட தற்காளி விலை தற்போது குறைந்து ரூ.100 என்ற அளவை எட்டி உள்ளது. இருந்தாலும் பல இடங்களில் அதிக விலைக்கே தக்காளி விற்கப்படுவதால் மக்கள் வேறு வழியின்றி கூட்டுறவு மையங்களில் ரூ.60 க்கு விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்