சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு பெற்றோர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
போலியோ என்றால் என்ன?

இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் போலியோ, மலம் வழியாக பரவும் தொற்று நோயாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்று தசைநார்களைப் பலவீனம் அடைய செய்து நரம்புகளை பதிக்கிறது. நரம்புகளின் சேதத்தைப் பொறுத்து வாத நோய் ஏற்படுகிறது. இந்த வாத நோய் இளம் பிள்ளை வாதம் என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக கால்களை தாக்குகிறது.
பண்டைய காலத்தில் இளம்பிள்ளை வாத நோயால் மக்கள் கடுமையாக பாதித்து வந்தனர். இதனை தடுப்பதற்காக உலக நாடுகள் போலியோ சொட்டு மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தன. இந்தியாவிலும் இது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் ஒழிக்ககப்பட்டு விட்ட போதிலும் கூட வருடா வருடம் சிறப்பு முகாம் நடத்தி இந்த சொட்டு மருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வருடத்திற்கு இரண்டு முறை தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. தமிழகம் கடந்த 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.
வரும் மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் போலியோ சொட்டு முகாம் நடத்த தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அரசு விடுக்கும் கோரிக்கை:

ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து மையங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தடுப்பூசி அட்டவணையின் படி,போலியோ சொட்டு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டாலும் முகாம்களில் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
போலியோவின் தீவிரத்தை உணர்ந்து பெற்றோர்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிய குழந்தையின் இடது சுண்டு விரலில் மை வைக்கப்படும். தமிழக முழுவதும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க 2000 தன்னார்வலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பெற்றோர்களே மறக்காமல் உங்கள் வீட்டுக் குழந்தையோ அல்லது பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் உறவினர்களோ யார் வீட்டிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வலியுறுத்துங்கள். அவர்கள் மறந்தாலும் நீங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். இதன் மூலம் போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க அனைவரும் கை கோர்ப்போம்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}