சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி இடையே இரு மார்க்கமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான சேவைகளை வழங்கும் நகரமாக தூத்துக்குடி திகழ்கிறது. அதாவது தூத்துக்குடி மிகப்பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம், என இருப்பதால் இங்கு பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு போக்குவரத்து வசதிகளும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக அடுத்தடுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் விமானத்தில் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தென் மாவட்டங்களில் கூடுதல் ரயில் சேவைகள் இல்லாத காரணத்தால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் விமான சேவையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, சென்னை டூ தூத்துக்குடி இடையே தற்போது 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 30 முதல் கூடுதலாக 12 விமானங்களாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சென்னை டூ திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்களில் இருந்து, தற்போது மார்ச் 22 ஆம் தேதி முதல் 16 விமானங்களாக உயர்த்தப்பட்டு விமான சேவை இயக்கப்பட உள்ளது.
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}