டெல்லி: 79வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரூ. 1 லட்ம் கோடியிலான இந்தத் திட்டத்தின் மூலம் 3.5 கோடிக்கும் மேலான இளைஞர்கள் பலன் பெறுவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். தனது பேச்சின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டதாவது:
இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. தரமான பொருட்களை உலக சந்தையில் கொண்டு சென்று இந்தியாவின் திறமையை நிரூபிக்கும் நேரம் இது. முழுமையான சுய சார்பே நமது இலக்கு. சுய சார்பை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.
இந்தியா விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளாது. விவசாயிகளுக்கு பாதகமான எந்த கொள்கையையும் ஏற்காது.இது வரலாற்றை உருவாக்கும் நேரம். நாம் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். தரமான பொருட்களால் உலகச் சந்தையில் நமது திறமையை நிரூபிக்கும் நேரம் இது.
விலை குறைவு, தரம் அதிகம் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் முன்னேறி நமது இலக்குகளை அடைய வேண்டிய நேரம் இது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு சுதந்திர இந்தியாவை கற்பனை செய்தது போல, வல்லமைமிக்க பாரதத்தைஉருவாக்குவதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டிய நேரம் இது. மற்றவர்களைக் குறை கூறுவதில் நமது ஆற்றலை வீணடிக்காமல், நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த பத்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். இப்போது நாம் பெரிய இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். நமது வர்த்தகர்களும், கடைக்காரர்களும் சுதேசி பொருட்களுக்கான பலகைகளை வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கக் கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
இந்தியா தனது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும், அப்போதுதான் உலகம் நமது முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளும். நாம் நமக்கான பாதையை உருவாக்க வேண்டும். தேவையற்ற இணக்கங்களை நாம் களைந்துவிட்டோம். இந்தியாவைத் தடுக்க முடியாது, இது பெரிய கனவுகளைக் காண ஒரு வாய்ப்பு என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}